புதன், 20 ஆகஸ்ட், 2008

புதிய பதிவர் சங்கம் (பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு

கும்மி, மொக்கை தோன்றி, பின்னூட்ட டுபுரித்தனம் தோன்றாக்காலத்திலிருந்து பதிவிட்டு வரும் மூத்த வலைஞர் கோவியாரின் பதிவு தமிழ்மணத்தையே சூடாக்கி இருப்பது யாவரும் அறிந்ததே.
அந்தப் பதிவின் எதிர்வினைதான் இந்தப்பதிவு.
ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே எதற்கெதற்கோ சங்கங்கள் இருக்கின்றன.
சங்கம் துவக்குவதும், கலாய்ப்பதும், கும்முவதும், பின்னூட்ட டுபுரித்தனம் உள்ளிட்ட அனைத்தும் பதிவர்களின் வாழ்வாதார உரிமை.
கும்மி, மொக்கை, சொசெசூ முதலிய சகல விஷயங்களையும் அறிந்து கொள்ள இந்த பு ப ச துவக்க உள்ளேன்.
இதில் புதிய பதிவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
சீனியர் பதிவர்கள் கற்றுக்கொடுக்கலாம்.
அனைவரும் வந்து அட்டெண்டன்ஸ் போட்டு உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள் வலைஞர்களே ! ! !
ஆரம்பம் இசை (ஸ்டார்ட் மீஜிக் - இன் தமிழாக்கம்).

5 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
ஆரம்பம் இசை (ஸ்டார்ட் மீஜிக் - இன் தமிழாக்கம்).
//
தொடங்கட்டும் இசை...

வோர்ட் வெரிபிகேசன் இருக்கும் பதிவுகளைப் புறக்கனிக்கப்போவதாக முக்கிய தீர்மானம் ஒன்னு ஓரளவுக்குப் பழய பதிவர்கள் சங்கம் நிறைவேற்றப் போகுத்து... அதனால வோர்ட் வெரிபிகேசனைத் தூக்கிடுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

மீத 2 சகெண்டு !

CA Venkatesh Krishnan சொன்னது…

ஜெகதீசன் கூறியது...
//
தொடங்கட்டும் இசை...
//

மிக்க நன்றி.

//வோர்ட் வெரிபிகேசன் இருக்கும் பதிவுகளைப் புறக்கனிக்கப்போவதாக முக்கிய தீர்மானம் ஒன்னு ஓரளவுக்குப் பழய பதிவர்கள் சங்கம் நிறைவேற்றப் போகுத்து... அதனால வோர்ட் வெரிபிகேசனைத் தூக்கிடுங்க
//

வேர்டு வெரிஃபிகேஷன் நீக்கப்பட்டுவிட்டது. நீங்கள் புதுப்பதிவராக இருந்த போது இந்த ப்ராப்ளம் இருந்ததா.

CA Venkatesh Krishnan சொன்னது…

// கோவி.கண்ணன் கூறியது...
மீத 2 சகெண்டு !
//

மிக்க நன்றி.

தொடர்ந்து ஆதரவு தாங்க.

coolzkarthi சொன்னது…

நான் வழிமொழிகிறேன்.....