தமிழ் செம்மொழி என்று யாரும் சொல்லத்தேவையில்லையென்றாலும் இன்றைய விளம்பரச் சூழலில் அது தேவையாயிருக்கிறது. இன்று தமிழ் செம்மொழியாகிவிட மற்ற மொழிகளும் அந்த வரிசையில் சேரத் துடிக்கின்றன.
இலக்கியம் ஒரு மொழியின் செம்மைக்கு எடுத்துக்காட்டு. காலங்கள் மாறியும் இலக்கியம் இயம்பும் கருத்தும் செறிவும் மாறாமல் இருப்பதே அவ்விலக்கியங்களின் சிறப்புக்குச் சான்று.
தமிழிலக்கியங்கள் காலங்களோடு கண்டறியப்படுபவை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பரிணாமத்தில் இலக்கியம் வந்துள்ளது.
சங்க காலத்தில் உள்ள அகத்திணை புறத்திணைகளும், அதன் பின்னர் எழுந்த பக்தி இலக்கியங்களும் குறிப்பிடத்தக்கவை.
தமிழிலக்கியம் இவ்வுலகைச் சூழ்ந்துள்ள பெரும் கடற்பரப்பிற்கொப்பானது. நானோ அலகில்லா அதன் பெரும்பரப்பின் கரையில் நிற்கும் சிறுவனைப் போன்றவன்.
என் சிற்றறிவிற்கெட்டிய வரையில் நான் ரசித்து மகிழ்ந்த இலக்கியங்களைப் பதிந்து கொள்ளுவதற்காகவும் பகிர்ந்து கொள்வதற்காகவுமானது இம்முயற்சி.
இதில் சிறிதளவேனும் வெற்றி பெற சீரளமைத் திறம்படைத்த தமிழ்த்தாயை வாழ்த்தி வணங்கித் துவங்குகிறேன்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ். வெல்க தமிழ்.
செவ்வாய், 14 ஏப்ரல், 2009
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008
தமிழ் மணம் - ஒரு துரித மீள்பார்வை (எ க்விக் ரிகேப்...)
அன்பார்ந்த புதிய, பழைய, பழைய புதிய மற்றும் புதிய பழைய பதிவர்களே,
இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்மணத்தில் இத்தனை கும்மிகள் இல்லை. பின்னூட்ட கயமைத்தனம் என்பது கன்டறியப்படாத காலம். சாதாரண நக்கல்களும் கேலி கிண்டல்களும் நிறைந்த பதிவுகள் வலம் வந்து கொண்டிருந்ததன.
பிறகு, குழலி, கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ், விடாது கருப்பு போன்றோர் சமூக சிந்தனைகளின் தாக்கத்தோடு பதிவெழுதினர். அக்கால கட்டத்தில் தமிழ்மணத்தில் சூடு பறந்தது. இப்பொழுது இவர்களின் பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லையா எனத் தெரியவில்லை.
இடையில் பல்வேறு போலிகள் தோன்றினார்கள். போலி டோண்டு, போலி விடாது கருப்பு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்டது சிகப்பு என்று ஒரு பதிவர் இருந்தார்.
மாயவரத்தான், முகமூடி ஆகியோர் . அவர்களையும் காணவில்லை.
நான் சற்றொப்ப 24 மாத காலமாய் தமிழ்மணத்தின் வாசகனாக இருந்து வந்திருக்கிறேன். தற்போதுதான் பதிவெழுத வந்துள்ளேன். தமிழ்மணம் குறித்தான எனது ஒரு துரித மீள்பார்வையை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்மணத்தில் இத்தனை கும்மிகள் இல்லை. பின்னூட்ட கயமைத்தனம் என்பது கன்டறியப்படாத காலம். சாதாரண நக்கல்களும் கேலி கிண்டல்களும் நிறைந்த பதிவுகள் வலம் வந்து கொண்டிருந்ததன.
பிறகு, குழலி, கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ், விடாது கருப்பு போன்றோர் சமூக சிந்தனைகளின் தாக்கத்தோடு பதிவெழுதினர். அக்கால கட்டத்தில் தமிழ்மணத்தில் சூடு பறந்தது. இப்பொழுது இவர்களின் பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லையா எனத் தெரியவில்லை.
இடையில் பல்வேறு போலிகள் தோன்றினார்கள். போலி டோண்டு, போலி விடாது கருப்பு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்டது சிகப்பு என்று ஒரு பதிவர் இருந்தார்.
மாயவரத்தான், முகமூடி ஆகியோர் . அவர்களையும் காணவில்லை.
டுபுக்கு, நகைச்சுவை பதிவர்களின் பிதாமகர் என்பது எனது தாழ்மையான கருத்து. இப்போது இவர் பதிவும் தமிழ் மணத்தில் காணப்படுவதில்லை.
இவர்கள் அனைவரும் பதிவெழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
ஸ்டிராங்காக அடித்து ஆடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அடுத்து வரும் பதிவுகளில். அனைத்து நிகழ்ச்சிகளையும் கூட்டி கழித்து பார்க்கும் போது ஒரு தத்துவப் பாடல் தான் நினைவிற்கு வருகிறது.
யாரோ வருவார் யாரோ போவார். வருவதும் போவதும் தெரியாது. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த தமிழ் மணத்தில் நமக்கே இடமேது?.
இந்த தத்துவப்பாடல் சரியா. நான் புதிய பதிவனாக இருப்பதால் எனக்கு இது நினைவுக்கு வருகிறதா. பழைய பதிவருக்கு என்ன பாடல் நினைவுக்கு வரும்?.
டிஸ்கி : அடுத்த பதிவு - புதிய பதிவர்கள் படிக்க வேண்டிய பழைய பதிவர்கள்
வியாழன், 21 ஆகஸ்ட், 2008
புதன், 20 ஆகஸ்ட், 2008
புதிய பதிவர் சங்கம் (பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு
கும்மி, மொக்கை தோன்றி, பின்னூட்ட டுபுரித்தனம் தோன்றாக்காலத்திலிருந்து பதிவிட்டு வரும் மூத்த வலைஞர் கோவியாரின் பதிவு தமிழ்மணத்தையே சூடாக்கி இருப்பது யாவரும் அறிந்ததே.
அந்தப் பதிவின் எதிர்வினைதான் இந்தப்பதிவு.
ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே எதற்கெதற்கோ சங்கங்கள் இருக்கின்றன.
சங்கம் துவக்குவதும், கலாய்ப்பதும், கும்முவதும், பின்னூட்ட டுபுரித்தனம் உள்ளிட்ட அனைத்தும் பதிவர்களின் வாழ்வாதார உரிமை.
கும்மி, மொக்கை, சொசெசூ முதலிய சகல விஷயங்களையும் அறிந்து கொள்ள இந்த பு ப ச துவக்க உள்ளேன்.
இதில் புதிய பதிவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
சீனியர் பதிவர்கள் கற்றுக்கொடுக்கலாம்.
அனைவரும் வந்து அட்டெண்டன்ஸ் போட்டு உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள் வலைஞர்களே ! ! !
ஆரம்பம் இசை (ஸ்டார்ட் மீஜிக் - இன் தமிழாக்கம்).

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)